கிழக்கின் பாரம்பரிய உணவகம் திறப்பு

மட்டக்களப்பு , செங்கலடியில் அமிர்தம் கிழக்கின் பாராம்பரிய உணவகம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.கிழக்கின் பாரம்பரிய

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மில்லியன் ரூபா நீதியுதவியில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் எமது மண்ணுக்குரிய பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி, பழங்கள் மற்றும் மட்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி லிபுஷியா சொபுகோ, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]