கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி

கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி

‘கிழக்கின் எழுச்சி” விவசாயக்கண்காட்சி மட்டக்களப்பு- கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தில் 19.09.208 ஆரம்பமானது.

வெள்ளிக்கிழமை வரையிலான மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை மாகாண ஆளுநர் றோஹித்த போகொல்லாகம சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்தார்.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கே. துரைராஜசிங்கம் மற்றம் விவசாய திணைக்கள அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

விவசாய, கால்நடை மற்றும் மீன்பிடி துறைகளின் உற்பத்திப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இக்கண்காட்சியினைப் பார்வையிடுகின்றனர்.

காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை இங்குள்ள கண்காட்சிக் கூடங்கள் திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தொழில் துறையில் விவசாயிகளது ஆர்வத்தினைத் தூண்டும் நோக்குடன் வருடாந்தம் இதுபோன்ற கண்காட்சி நடாத்தப்படுவதாக விவசாய அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி கிழக்கின் எழுச்சி விவசாயக்கண்காட்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]