கிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு வீரர்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் விஸ்வாசம். இப்படத்தின் தந்தை மகள் பாசம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. அந்த காட்சியில் தன்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி என தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதிஷ் சிவலிங்கம் தெரிவித்துள்ளது.

இவர் கடந்த வருடம் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். படம் பற்றி மேலும், “விளையாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் படம் இருந்தது, அதில் உள்ள உண்மையான பிரச்னையை படம் வெளிக்காட்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]