கிளைபோசெட் தடை நீக்கம்

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு சீனாவினால் கட்டுப்பாடு விதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த தடை நீக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிளைபோசெட் களைநாசினியை இலங்கையில் இறக்குமதி செய்தல், விற்பனை மற்றும் விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.