கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று பணிப்புறக்கணிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சகல பேரூந்துகளும் இன்றைய தினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா இதனை தெரிவித்துள்ளார்.

வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள, கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையிலான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு, வவுனியா – மாங்குளம் – மல்லாவி ஊடாக பேரூந்து சேவையை மேற்கொள்ள அனுமதி வழங்கியமை மற்றும் வவுனியா – மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக பூநகரி வரையான பேரூந்து சேவைக்கான அனுமதியை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

அத்துடன், மக்கள் மீள்குடியேறிய காலம் தொடக்கம் கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் சேவையினை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]