கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி

ஏ.9 ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் என்பனவே நேற்று இரவு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

த கிளிநொச்சி தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய சிங்கராசா செந்தில்நாதன் மற்றும் கரவெட்டியை சேர்ந்த ஒருவரும் இந்ம விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]