கிளிநொச்சி மாவட்டத்தில் 83 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்

வட மாகாணத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.கிளிநொச்சி மாவட்டத்தில்

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான விசேட கூட்டத்தின் போதே இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இதில் கரைச்சி பிரதேச செயலகத்தில் 42 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 9327 குடும்பங்களைச் சேர்ந்த 32632 பேரும், கண்டாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 16 கிராம அலுவலர் பிரிவுகளில் 5767 குடும்பங்களைச் சேர்ந்த 20181 பேரும், பூநகரி பிரதேச செயலகத்தில் 19 கிராம அலுவலா் பிரிவில் 5354 குடும்பங்களைச் சேர்ந்த 18654 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 18 கிராம அலுவலா் பிரிவுகளில் 3464 குடும்பங்களைச் சேர்ந்த 11624 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனா் என மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 32 கிராமங்களுக்கு 3914 குடும்பங்களுக்கு பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், மாவட்ட அனா்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ், பிரதேச செயலாளா்கள் பிரதேச சபையின் செயலாளா்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]