கிளிநொச்சி பட்டதாரிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

பட்டதாரி பயிலுநர் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளிக்காத பட்டதாரிகளுக்கான மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

இந் நேரமுகத்தேர்விற்கு சமூகமளிக்காத பட்டதாரிகளிற்கான நேர்முகத்தேர்வு மே மாதம் 01ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்விற்கு சமூகமளிப்பதற்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்பதால், இதுவரை சமூகமளிக்காத பட்டதாரிகள் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளிக்க முடியும் என, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]