கிளிநொச்சி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இரவு எட்டு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது பணியை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நாட்டு துப்பாக்கி கொண்டு இந்த சூட்டு சம்பம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.