கிளிநொச்சி நேற்றையதினம் பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து பதின்மவயதுச் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்
குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் காணப்பட்டுள்ளமயினால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரும் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரேனும் இன்று கடமைக்கு வரவில்லையா என வினவியிருக்கின்றனர்
இதன் போது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர்குடும்பத்தவர்களை அழைத்துக்கொண்டு வைத்திய சாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு அடையாளம் காணப்பட்டது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com