கிளிநொச்சியில் பெரிய பரந்தன் பிரதேசத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன

கிளிநொச்சியில் பெரிய பரந்தன் பிரதேசத்தில் நேற்று வீசிய காற்றின் காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளன.


கிளிநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி இதுதொடர்பாக தெரிவிக்கையி;ல் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீசிய மழையுடன் கூடிய காற்றின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மரங்கள் முறிந்துவிழுந்துள்ளன. காற்றின் காரணமாக வீட்டுகூரைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.