முகப்பு News Local News கிளிநொச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி

கிளிநொச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி

கிளிநொச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி

கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ள மாட்டுவண்டி சவாரி போட்டியில் 98 ஜோடிகள் பங்குப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சி- அக்கராயன் சவாரி திடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குறித்த சவாரி போட்டியானது, கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இப்போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் 5 பிரிவுகளில் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 98 ஜோடிகள் அழைத்து வரப்பட்டு விறுவிறுப்பாக போட்டி நடத்தப்பட்டது.

அதிகூடிய ஜோடிகள் பங்குபற்றிய முதலாவது சவாரி போட்டியாக இது கருதப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்போட்டியினை பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக திகழும் இப்போட்டி இலங்கையில் 50 வருடங்களிற்கு மேலாக முன்னெடுத்து வரப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com