கிளிநொச்சியில் சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் – காரணம் உள்ளே!!

கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டிய படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(05) கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் காலை முதல் ஒன்பது மணிவரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கத்திவெட்டு எம் கலாசாரத்தை சீரழிக்கும், சந்தையின் பாதுகாப்பு யார் கையில், தனிநபர் வாள்வெட்டு தமிழின சாபக்கேடு, வயிற்றுப் பசியை தீர்க்க வந்த நாம் வாள்வெட்டுக்கு இரையாவதா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைககளையும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகைதந்த கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன் வியாபாரிகளின் உணர்வுகளை மதிக்காது பூட்டியிருந்த சந்தையின் கதவுகளை திறந்து உற்பத்தியாளர்களை உள்ளே விட்ட சம்பவம் வியாபாரிகளை மனதளவில் பாதித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் முன்னறிவித்தல் இன்றி சந்தை வர்த்தகர்கள் சந்தையினை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமையானது தொலைவில் இருந்து தங்களின் உற்பத்தி பொருட்களுடன் சந்தைக்கு வந்த உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]