கிளிநொச்சியில் கோர விபத்து; நால்வர் பலி

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்