முகப்பு News Local News கிளிநொச்சியில் கடற்பரப்பில் இருந்து கஞ்சா பொதி மீட்பு

கிளிநொச்சியில் கடற்பரப்பில் இருந்து கஞ்சா பொதி மீட்பு

கிளிநொச்சியில் கடற்பரப்பில் இருந்து கஞ்சா பொதி மீட்பு

கிளிநொச்சியை அண்மித்த கடற்பரப்பில் இருந்து கஞ்சா பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, இரணைத்தீவை அண்மித்த கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த நிலையிலே கேரள கஞ்சா தொகையொன்றினை கடற்பரையினர் மீட்டுள்ளனர்.

குறித்த கஞ்சா பொதி நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டதாகவும், அது 284 கிலோ கிராம் நிறையுடையது என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சந்தேகநபர்கள் சிலர் கொண்டு வந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com