கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் 8 வயதுடைய சிறுமி பரிதாப பலி

இன்று காலை கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதில் உமையாள்புரம் பாடசாலையில் தரம் – 03இல் கல்வி கற்று வரும் 8 வயதுடைய ராஜ்குமார் யதுர்சா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுமி இன்று காலை வீட்டிலிருந்து முச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கி மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது முன்னால் வந்த ஹயஸ் வாகனம் சிறுமியை மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுமியை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]