கிளஸ்டர் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்

கொத்தணிக்குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை ஒப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

குறித்தத பிரகடனத்தில் கைச்சாத்திடுவதற்கான அனுமதியைக் கோரும் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் ஊடாக கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில், கையெழுத்திட்ட 102 நாடுகள் பட்டியலில் இலங்கை சேர்த்துக்கொள்ளப்படும்.