கிரிவெஹர ரஜமகா விகாரையின் தேரர்கள் மீது துப்பாக்கிச்சூடு

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் பிரதம குரு, வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய ஜீப் வண்டியை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந் தெரியாத நபர்களினால் நேற்று (12) இரவு 11 மணியளவில் இந்த துப்பாகிச் சூடு ரஜமகா விகாரை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டில் ரஜமகா விகாரையின் பிரதம குரு உட்பட மற்றுமொரு தேரரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேரர்கள் இருவரும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]