கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் சுவாரஸ்ய காதல் கதை!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், 2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக விளையாடியபோது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். சர்வதேச போட்டிகள், இந்திய ஐபிஎல் போட்டிகள் என பல போட்டிகளில் இவரது ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

தற்போதும் இலங்கை அணியின் முன்னணி வீரராக இருக்கும் ஏஞ்சலா மேத்யூஸ் 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.

தனது 19 வயதில் வருங்கால மனைவி ஹெஷானியை முதல் முறையாக மேத்யூஸ் சந்தித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அதன்பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். காதலை வெளிப்படுத்தியது முதலில் மேத்யூஸ்தான்.

நான் உன்னை காதலிக்கிறேன், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என மேத்யூஸ், ஹெஷானியுடம் கேட்டபோது, பதில் எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார் ஹெஷானி.

வீட்டிற்கு வந்த அவர், உடனே தனது அம்மாவிடம்…..மேத்யூஸ் என்னை பிடித்திருக்கிறது என கூறினார் என தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்ந்துகொண்ட அம்மா, திருமணம் செய்துவைக்க முடிவுசெய்ததையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் பம்பளப்பட்டியில் உள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2017 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]