கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு- 8பேர் பலி பலர் காயம்!!

கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு- 8பேர் பலி பலர் காயம்!!

எங்கு பார்த்தாலும் இந்த குண்டு வெடிப்புக்கு குறை இல்லை. மனித உயிர்களுக்கு மதிபின்றி போகிறது . அனைவரும் மதிக்கும் கிரிக்கெட் மைதானத்தில் கூட குண்டு வைக்க தொடங்கி விட்டார்கள் ..!

ஆப்கானிஸ்தானில்ஜலாலாபாத் நகரில் உள்ள ஸ்பின்கர் மைதானத்தில் ரம்ஜான்கோப்பைக்கான சிறப்பு போட்டி நடந்துகொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக மைதானத்தின் உள்ளே பெரும் சத்தத்துடன்இரண்டு குண்டுகள் வெடித்தது.
அடுத்த சிறிது நேரத்தில் மைதானத்துக்கு வெளியிலும் இரண்டு குண்டுகள் வெடித்தது.

இந்தப்குண்டு வெடிப்பினால் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜலாலாபாத் நகரின் துணை மேயர் மற்றும் போட்டியின் அமைப்பாளர் ஆகியஇருவரும் காயமடைந்துள்ளனர்.

தகவல்அறிந்து சம்பவ இடதுக்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் மைதானத்தில்

இது பற்றிஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, புனிதமான ரம்ஜான் மாதத்தில் எம் மக்களைப் பயங்கரவாதிகள்கொல்வது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

விளையாட்டு மைதானம் எனவும் பார்க்காமல் குண்டு வெடிப்பு நிகழ்த்தியுள்ளனர். இதிலிருந்து, பயங்கரவாதிகளுக்கு எந்தச் சமயமும் கிடையாது. அவர்கள் மனிதாபிமானத்துக்குஎதிரானவர்கள் மட்டுமே, என்பது நிரூபணமாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆப்னிஸ்தான் தாக்குதலுக்கும் எங்களுக்கும்எந்தச் தொடர்பும் இல்லை எனத் தலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]