கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து அணி

கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து அணி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக, இங்கிலாந்து அணியினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி ஜொஸ் பட்லர், ஆதில் ரஷீட், மொயின் அலி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியன் ப்லன்கட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் பலர் நேற்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

5 சர்வதேச ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரொன்றில் இரு அணி வீரர்களும் விளையாடவுள்ளனர்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இவ்வருடத்தில் இலங்கை அணி விளையாடவுள்ள இறுதி கிரிக்கெட் தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் தொடர் போட்டிகளில் கிரிக்கெட் தொடர் போட்டிகளில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]