கிரிக்கெட்டின் யுத்தம் : இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தானுக்கு சிறந்த வாய்ப்பு: இம்ரான் கான்

கிரிக்கெட்டின் யுத்தம் என்று வர்ணிக்கப்படும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐ.சி.சி. செம்பின்துரோப்பி இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் அமைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் வலுவான இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று பரவலாக பேசப்பட்டாலும் பாகிஸ்தான் அணியின் எழுச்சி இந்தியாவுக்கு கடும் சவாலாக அமையும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

இதனால் கிண்ணத்தை எந்த அணி கைப்பற்றும் என்று உறுதியாக கணிக்க முடியாதுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அணியின் அதிசிறந்த தலைவராக வர்ணிக்கப்படும் இம்ரான் கான் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

முதல் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்தியாவிடன் சிறந்த துடுப்பாட்ட வரிசை உள்ளது. அவர்கள் முதலில் துடுப்பெடுத்தாடி மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை நிர்ணயித்தால் அது பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் தரும். அதனால் நாணய சுழற்சியில் வென்றால் பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்ய வேண்டும்.

மற்ற அணிகளுக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது சர்பராஸுக்கு கை கொடுத்திருக்கலாம். ஆனால், இந்தியாவிடம் வலிமையான துடுப்பாட்ட வரிசை இருப்பதால் அவர்கள் அதிகமாக ஓட்ட இலக்கை நிர்ணயித்து நமது பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் என ஒரு தரப்புக்கும் இரண்டு மடங்கு அழுத்தம் தருவார்கள். பாகிஸ்தான் அணியின் உண்மையான பலம் அதன் பந்துவீச்சு தான். எனவே, நாம் முதலில் துடுப்பெடுத்தாடி பிறகு கட்டுப்படுத்துவதே சிறந்த திட்டமாக இருக்கும். சர்பராஸ் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளார், தைரியமான அணித்தலைவராக இருக்கிறார் எனக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]