இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தங்களது பலம் மற்றும் கடமை தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்த வேண்டும்

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தங்களது பலம் மற்றும் கடமை தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்த வேண்டும்

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தங்களது பலம் மற்றும் கடமை தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் இடைக்கால பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கட் அணி இந்தியா சென்றுள்ளது.

இந்தநிலையில், இலங்கை அணியின் வீரர்கள் மிகச்சிறந்த அணி ஒன்றுடனான போட்டியில் சவாலை வழங்க வேண்டியது முக்கியமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணிக்கான புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்படவுள்ளமையை உறுதிப்படுத்தும் வகையிலான முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது பங்களாதேஸுக்கு பயிற்சியளித்து வரும் ஹத்துருசிங்க, அந்த பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கையளித்துள்ளமையை பங்களாதேஸ் கிரிக்கட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக oபதவி ஏற்கும் பொருட்டே ஹத்துருசிங்க இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]