முகப்பு Cinema கிரிகெட் விளையாட தெரியாது – மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்

கிரிகெட் விளையாட தெரியாது – மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கனா’

இப்படத்தின் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற வருகின்றது.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கனா திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள்.

நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இதுவாக கருதப்படுகினறது.

கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை. கனா படம் குறித்து இப்படி ஏகப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட பெண்ணாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இடம்பெற்றது. இதில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்,

‘முதலில் நான் சிவகார்த்திகேயனுக்கு நன்றியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு கிரிகெட்டை பற்றிய இடம் இது. பொதுவாக ஹீரோ, ஹீரோயின் வைத்து படம் பண்ணுவார்கள் ஆனால், ஒரு ஹீரோயினை வைத்து படம் பண்ணினால் ஓடுமா? ஏன்று பார்த்தார் குறைவு தான்.

ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்;த அனைவருக்கும் நன்றி. சிவகார்த்திகேயன் நல்ல படத்தை தந்திருக்கிறார்.

ஒருநாள் சிவா மெஜ்சேஜ் பண்ணி கிரிகெட் விளையாட தெரியுமானு கேட்டாரு. நான் தெரியாது. வேணுனா ட்ரை பண்ணலாம் அப்படினு சென்னேன். அப்படியானு சிரிச்சிட்டு வைச்சிட்டாரு.

நா என்னோட பிரன்ஸ் எல்லாருக்கும் கால் பண்ணி கிரிகெட் விளையாட தெரியுமானு கேட்டேன்.பிறகு நான் அருண்ராஜ் சேர்க்கு கால் பண்ணி நானே இந்த ரோல் பண்ணவானு கேட்டேன்.

பிறகு ஒரு வாரம் கிரிகெட் ப்ரெக்டிஸ் பண்ண கிடைச்சது. அன்னைக்கு என் மேல நம்பிக்க வைச்சி எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தாங்க’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com