கிராம அலுவலகரின் அலுவலக பலகையினை உடைத்த இளைஞர்கள் கைது

கிராம அலுவலகரின் அலுவலக பலகையினை உடைத்த இளைஞர்கள் கைது

யாழ்.அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதி கிராம அலுவலகரின் அலுவலக பலகையினை உடைத்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுவருட பிறப்பு கொண்டாட மகிழ்ச்சியில் மது போதையில் சென்ற 6 இளைஞர்கள் ஜேஷ89 கிராம சேவையாளர் பிரிவின் அலுவலக பலகை உடைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிராம அலுவலகரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் பிரகாரம், அதே இடத்தினைச் சேர்ந்த சுமார் 17 வயது மற்றும் 18 வயதுடைய 6 இன்று அதிகாலை (01.01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 6 இளைஞர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]