கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்த அரசு நடவடிக்கை

கிராமிய மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அவர்களது பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தியின் நன்மைகளை பெற்றுக்கொடுத்து அவர்களது பொருளாதாரத்தை சுபீட்சப்படுத்துதல் தற்போதைய அரசின் செயற்பாடாகும். பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதிக்குள் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு வரலாற்றுக் காலங்களில் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் கிராமத்து விகாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்கள் முக்கியமானவை. அவ்வாறான இடங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து ஆன்மீக பண்புகளைக்கொண்ட சமூகத்துடன் அபிவிருத்தியின் எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ளுதல் தற்போதைய அரசின் குறிக்கோளாகும் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]