கிரான் வாராந்த சந்தையில் தரமற்ற பொருட்கள் மீட்பு

கிரான் வாராந்த சந்தையில் தரமற்ற பொருட்கள் மீட்பு

தரமற்ற பொருட்கள்

மட்டக்களப்பு கிரான் வாரந்த கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள், உணவுப் பொருட்கள், மற்றும் சந்தையில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைப்பழம் என்பன இன்று (17) கிரான் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கிரான் வாரந்த சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம் குறிந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அதிகளவான பொதுமக்களும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருவதுண்டு.

குறித்த சந்தையில் தரம் குறைந்த மற்றும் பழுதடைந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொதுச்சுகாதார பரிசோதகர்களான கு.சோமனகாந்தன் மற்றும் த.பகிரதன் ஆகியோர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன

அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட 20 குலை வாழைப்பழம், அயடீன் கலக்கப்படாத உப்பு 56 பக்கட்டுகள், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த உணவு (பணிஸ்) 80 மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மல்லி 8 கிலோகிரம் கைப்பற்றப்பட்டுள்ளன.

தரமற்ற பொருட்கள்தரமற்ற பொருட்கள்

இவற்றில் வாழைப்பழம் மற்றும் பணிஸ் வியாபாரிகளின் அனுமதியுடன் உடனடியதாக அழிக்கப்பட்டதுடன், மல்லி மற்றும் உப்பு பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளதாக சுகாதா பரிசோதகர் கு.சோமனகாந்தன் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]