கிம்முடன் உச்சநிலைச் சந்திப்பு தோல்வி- பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்

ஹனோய், மார்ச் 1- வியட்னாமில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோரின் உச்சநிலைச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாதியிலேயே வெளியேறினார் டிரம்ப்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதை அமெரிக்கா, சீனா, தென்கொரியா நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வந்தது. அதனால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பில் பெரிதான முன்னேற்றம் ஏற்படாத நிலையில் பிப். 27-28ஆம் தேதிகளில் வியட்னாமில் மீண்டும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் படி வியட்னாம் ஹனோய் நகரில் மெட்ரோபோல் தங்கும் விடுதியில் டிரம்ப்– கிம் சந்தித்து பேசினர். நேற்று 2ஆவது நாளாக 40 நிமிடங்கள் நடந்த பேச்சு வார்த்தையில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

அதற்கு முன்பாக அந்நாட்டின் மீதுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்க நீக்க வேண்டும் என்று புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒப்பத்தங்கள் கையெழுத்தாக இருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே டிரம்ப் பாதியில் எழுந்து சென்றதால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இது குறித்து டிரம்ப், மொத்தமாக பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்கின்றனர். அது இயலாது என்பதால் எழுந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுக்கும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]