கின்னஸ் சாதனை விவகாரம் – பிரச்சினைகள் தொடர்கின்றன

கின்னஸ் சாதனை விவகாரம் – பிரச்சினைகள் தொடர்கின்றன

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை நீண்ட சேலை தலைப்பை ஏந்த செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய மாகாண கல்வி செயலாளர் குறித்து ஊவா மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த மாகாண கல்வி செயலாளர் இடமாற்றம் பெற்று ஊவா மாகாண சபையின் பிரதான செயலாளராக கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த பதவியின் பொருட்டு நீண்ட காலமாக அந்த மாகாணத்தில் சேவையாற்றிய சிரேஷ்ட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என நேற்று கூடிய ஊவா மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தின் போது ஏகமானதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த யோசனையை மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் ஆர்.எம் ரத்நாயக்க முன்வைத்தார்.

ஊவா மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த யோசனை தொடர்பில் அந்த மாகாண சபையின் புதிய பிரதான செயலாளர் பீ.பி. விஜேரத்னவை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதில் வழங்கிய அவர், மாகாண சபைக்கு இவ்வாறான பிரேரணை ஒன்றை நிறைவேற்ற அதிகாரம் இல்லை என குறிப்பிட்டார்.

தேவையேற்படின் கின்னஸ் சாதனைக்காக சேலை தலைப்பை ஏந்திய சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]