கினிகத்தேன பகுதியில் 30அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து

பஸ் விபத்து

ஹட்டனிலிருந்து காலி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச்செல்ல முயற்சித்த காரென்று, 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

கினிகத்தேன ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரியொருவர் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தினால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.