கிந்தொட்ட அசம்பாவிதத்தின் சேத விபரங்கள்

கிந்தொட்ட அசம்பாவிதத்தின் சேத விபரங்கள்

கிந்தொட்டபொலிஸார் கிந்தொட்ட அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.

காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, கயந்த கருணாதிலக்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்படி, சேதமடைந்த வீடுகள் – 66 எனவும், சேதமடைந்த வியாபார நிறுவனங்கள் – 26 எனவும், 2 பள்ளிவாயல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பாதையில், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]