கிண்ணையடி கிராமத்தின் பெயர் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

மட்டக்களப்பு கிண்ணையடி கிராமத்தின் பெயர் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இன்று புதன்கிழமை (23) பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – திருமலை வீதியில் கிண்ணையடி சந்தியில் ஒன்றுகூடிய சுங்காங்கேணி, கிண்ணையடி, முருக்கன்தீவு மற்றும் பிரம்படித்தீவு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களையெழுப்பினர்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கிண்ணையடி கிரமத்தினை அடையாதளப்படுத்தும் வகையில் கிராமத்தின் பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்து.

குறித்த பலகையான கடந்த ஒரு மாத்திற்கு முன்பு இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டிருந்து. இது தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிண்ணையடி கிராமத்தின் புதிய பெயர் பலகை நிருமானிக்க அப்பிரதேசத்தில் இயங்கிவரும் மில்லர் விளையாட்டுக் கழகத்தினர் கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையில் அனுமதி பெறப்பட்டு கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

கிண்ணையடி கிராமத்தின் கிண்ணையடி கிராமத்தின்

பெயர் பலகை நிருமானிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஆர்ப்பட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுக்காதே தடுக்காதே மில்லரின் உரிமையைத் தடுகாதே, கிராமத்துக்கு கிராமம் சட்டம் வேறுபடுகிறதா?, எமது பெயர் பதாதையைத் தடுக்காதே, பெயர் பதாதையை புதிப்பிக்க அதிகாரசபை அனுமதி மறுப்பது ஏன், மிரட்டாதே மிரட்டாதே பிரதேச சபை உறுப்பினரை மிரட்டாதே, உடைக்காதே உடைக்காதே எங்கள் அடையாளங்களை உடைக்காதே, நீங்கள் உடைக்க நினைப்பது சீமேந்து தூண் அல்ல எங்கள் உரிமைகளையும் உணர்வுகளையும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏற்தியிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]