கிண்ணியாவை மிரட்டுகிறது டெங்கு நோய் தடுப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மேலதிக நோயாளர்களை நீர்கொழும்பு தள வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம், டெங்குப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் அசித்த, இலங்கை வைத்தியத் துறையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர்களின் தலைவர் லக்மால் டீ. சில்வா ஆகியோர் தலைமையிலான குழுவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வழிமுறைத் தெடட்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட உயர்மட்டக் குழுவினர், அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் குறைபாடுகளையும் கண்டறிந்தார்.

இதன் பின்னரே மேற்பாடி கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை உடன் நிவர்த்திக்குமாறு மு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதார பிரதிமைச்சர் பைசல் காஸிம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் லாஹிர், திருகோணமலை அரசாங்க அதிபர், திருகோணமலை, முப்படைகளின் தளபதிகள், வைத்திய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கிண்ணியாவில் அதிகளவில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு விசேட வைத்திய நிபுணர்கள் இரண்டு பேர் கடந்த வாரம் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், கொள்கலன்களில் பொருத்தப்பட்டுள்ள விசேட சிகிச்சை பிரிவொன்றும் கிண்ணியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் 113 டெங்கு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நிலையில், வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் கிண்ணியாவில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு பரவல் காரணமாக மூடப்பட்ட திருகோணமலை கிண்ணியா வலயப் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

டெங்கு காரணமாக 66 பாடசாலைகள் தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்ட நிலையில்,நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]