மன்னாரில் கிணற்றில் விழுந்து சகோதரர்கள் இருவர் பலி

மன்னார், காக்கையன்குளம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 7.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 7 வயதான மொஹமட் சபூர் மற்றும் 5 வயதான மொஹமட் சமீருஃப் எனும் சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்கள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]