‘கிகி’ நடனத்தை ஆடி ஆச்சரியப்படுத்திய பெண் பைலட்கள் – வீடியோ உள்ளே

சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடன சவால் பிரபலமாகி வருகிற அதேவேளை, சிலருக்கு இது ஆபத்தாகவும் போய் முடிந்து விடுகின்றது.

அதாவது,’கிகி’ நடன சவாலானது, ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். இந்த சவாலை ஏற்று ஹொலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதனால் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது.

இந்நிலையில், நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் ‘கிகி’ நடனம் ஆடி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் பைலட், தனது உதவியாளருடன் கிகி நடனம் ஆடியுள்ளார்.

நகரும் விமானத்தின் அருகில் இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]