முகப்பு News Local News காஸ் விலை தொடர்பில் அரசாங்கம் புது முயற்சி

காஸ் விலை தொடர்பில் அரசாங்கம் புது முயற்சி

காஸ் விலை தொடர்பில் அரசாங்கம் புது முயற்சி ஒன்றை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி குறித்த இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையே தற்போது முழு முயற்சியுடன் ஒரு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருவதாக வாழ்க்கைச்செலவுக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

காஸ் விலை தொடர்பான இந்நடவடிக்கை அமுல்படுத்தினால் உலகச்சந்தையில் காஸின் விலை குறைவடையும் போது, உள்நாட்டிலும் காஸின் விலை குறைவடையும் என்றும் அந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் காஸின் விலையை அதிகரிக்குமாறு, காஸ் நிறுவனங்கள் விடுத்திருந்த கோரிக்கை ஆராய்ந்ததன் பின்னரே, குறித்த நடவடிக்கையை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com