காஸ்மீரில் இளைஞர் மனிதகேடயமாக பயன்படுத்தியமை தவறான நடவடிக்கை

காஸ்மீரில் இளைஞர் இந்திய காஸ்மீரில் இளைஞர் ஒருவரை படையினர் மனிதகேடயமாக பயன்படுத்தியமை தவறான நடவடிக்கையாகும் என்று குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.

காஸ்மீரின் காவல்துறையினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், 9ஆம் திகதியன்று இடைத்தேர்தல் ஒன்றை ஆட்சேபித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதன்போது படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 8பேர் பலியாகினர்.

இதனையடுத்து, படையினர் மீது பொதுமக்கள் கல்வீச்சுக்களில் ஈடுபட்டபோது, அதனை தடுப்பதற்காக படையினர் இளைஞர் ஒருவரை தமது ஜீப் வண்டியின் முன்னால் இருக்கவைத்து வாகனத்தை செலுத்திசென்றனர்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புக்கள் ஏற்கனவே கண்டனங்களை வெளியிட்டன.

இந்தநிலையில் மனித கேடயமாக குறித்த இளைஞரை பயன்படுத்திய படைப்பிரிவின் மீது காஸ்மீர் காவல்துறை வழக்கை பதிவுசெய்துள்ளது.