காஷ்மீரில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முப்பத்து மூன்று பயணிகளுடன் பயணித்த பஸ் சுமார் ஆயிரம் மீற்றர் பள்ளத்தாக்கில் வீழ்ந்ததினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில், மலைப் பகுதிகளிலுள்ள வீதிகள் சீரின்றி காணப்படுவதால், அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் சம்பவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் பஸ் காஷ்மீரில் பஸ் காஷ்மீரில் பஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]