காவ்யா மாதவனுக்கு முன்ஜாமீன் தேவை இல்லை

காவ்யா மாதவனுக்கு பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு முன்ஜாமீன் தேவை இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய காவ்யா மாதவன் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்த வழக்கில் காவ்யா மாதவன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்பதால், அவரை கைது செய்யும் எண்ணம் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காவ்யா மாதவனுக்கு முன்ஜாமீன் தேவை இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

அதேசமயம், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரான டைரக்டர் நாதிர்ஷா தாக்கல் செய்துள்ள மனு வருகிற அக்டோபர் 4-ந் தேதி பரிசீலிக்கப்படும் என்று ஐகோர்ட்டு கூறி இருக்கிறது.