காவியன் திரைப்பட அசத்தல் motion poster

நடிகர் ஷாம் தற்போது ‘2M cinemas’  K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மோசன் போஸ்ட்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளதுடன் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் ‘காவியன்’ என்றும் தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கோலிவுட்  நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார், இசை – ஷ்யாம் மோகன், பாடல்கள் – மோகன்ராஜ், கலை – T.N கபிலன், நடனம் – விஷ்ணுதேவா, படத் தொகுப்பு – அருண்தாமஸ், மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – 2M cinemas K.V. சபரீஷ், எழுத்து இயக்கம் –  சாரதி.

இந்தப் படத்தில் கோலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]