காவல்நிலையத்துக்கு முன்பாக சிறுமிக்கு ஏற்பட்ட கதி!

காவல்நிலையத்திற்கு அருகியில் உள்ள வீதியில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்னாவின் மித்தாப்பூர் சபாஜி பகுதி காவல்நிலையத்திற்கு அருகியில் உள்ள வீதியில் நேற்று இரவு சிறுமி ஒருவர் தனியாக ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த இருவர் கடத்த முயல்கையில், சிறுமி எழுப்பிய ஒலி கேட்டு பொலிஸார் விரைந்து கடத்தல்காரர்களை கைதுசெய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும், உடனடி மருத்துவ தேவைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சோட்டு, பேக்கன் என்ற இருவர் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டதுடன், விசாரணையில் இவர்களது நண்பர்களுடன் கூட்டு வன்புணர்வு வைத்துக்கொள்ள இச்சிறுமியை கடத்த முயன்றதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]