கால் நடைகள் கடத்தப்படுவதை கண்டித்து ஊர்காவற்றுறையில் கவனயீர்ப்பு போராட்டம்- வீடியோ இணைக்கப்பட்டுள்ளது!

யாழ்.தீவகம் புங்குடுதீவில் தொடர்ச்சியாக கால் நடைகள் கடத்தப்படுவதை கண்டித்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன் பாக இன்று நண்பகல் 12.30 மணிக்கு மக்க ளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியிலிருந்து தொடர்ச்சியா க கால்நடைகள் கடத்தப்பட்டு வருகிறது. கு றிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வ ருவோர் புங்குடுதீவில் உள்ள சிலருடைய ஒத்துழைப்புடன் மக்களுக்கு சொந்தமான கால்நடைகளை திருட்டு தனமாக பிடித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்க ளுக்கு குறிப்பாக இஸ்லாமிய வர்த்தகர்க ளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு இன்றைய தினம் காலை கப் வா கனம் ஒன்றில் கடத்தப்பட்ட மாடுகளை அ திகாலை இளைஞர்கள் இணைந்து துரத்தி சென்று மண்டைதீவு சந்தியில் வைத்து பி டித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப் படைத்துள்ளனர். இதனையடுத்து இன்று நண்பகல் 12 மணியளவில் ஊர்காவற்று றை நீதிமன்றுக்கு அருகில் கூடிய புங்குடு தீவு மக்கள் பதாகைகளை தாங்கியவாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தார்கள்.

பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன் பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதன் போது கால்நடைகள் கடத்தலுடன் சம்மத்த பட்டவர்கள் யார்? என மக்களுக்கு அடையா ளப்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]