கால் எலும்பு முறிந்த நடிகை

இளைய தளபதி விஜய்யுடன் மதுர, சிம்புவுடன் தம் படங்களில் நடித்தவர் ரக்‌ஷிதா.

Rakshita

கன்னடம், மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னட நடிகர் பிரேமை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் இணைந்தார்.

பிறகு நடிப்பில் கவனத்தை குறைத்துக்கொண்டு கர்நாடக அரசியலில் குதித்தார்.

Rakshita

அரசியலில் எதிர்பார்த்தளவுக்கு மின்ன முடியாத நிலையில், முதலில் பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் பிறகு அக்கட்சியிலிருந்து விலகி ஜனதா தள கட்சியில் சேர்ந்தார்.

இரண்டு கட்சியிலும் அவர் கேட்ட தொகுதிகளில் சீட் தரவில்லை என்பதால் அடுத்தடுத்து அக்கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ. கட்சியில் இணைந்தார்.

rakshita

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரக்‌ஷிதாவுக்கு கால் எலும்பு முறிந்ததாக தகவல் வெளியானது. அதை உறுதி செய்த அவர் வலது காலில் எலும்பு முறிவுக்காக மாவுகட்டு போட்டிருக்கும் காட்சியை படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது குணம் அடைந்து வருவதாகவும் விரைவில் நடக்க தொடங்கிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]