கால்நடைகளின் நடமாட்டத்தால், மன்னார் பிரதான வீதிகளில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

கால்நடைகளின் நடமாட்டத்தால், மன்னார் பிரதான வீதிகளில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் மன்னார் பிரதான வீதிகளில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அந்தவகையில், மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, மன்னார்- யாழ் பிரதான வீதி, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, மன்னார்-நானாட்டான் பிரதான வீதி ஆகியவற்றிலேயே கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கால்நடைகள், கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதினாலும் வீதிகளில் கூட்டமாக கிடப்பதினாலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

எனவே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, கால்நடைகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி, மக்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கால்நடைகளின் நடமாட்டத்தால் கால்நடைகளின் நடமாட்டத்தால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]