நம் நீண்ட தூர பிரயாணத்தை குறைக்க வாகனங்கள் தோன்றின.அந்த வாகனங்களில் புதிய புதிய மாறுதல்கள் நடைபெறுகையில் நம் நடைபயணத்தை இலகுவாக்க கிடைத்த விடயம் தான் two-wheeled scooters எனும்இரண்டு சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டர் .

பெரிய இடவசதிகள் எதுவும் தேவையில்லை.உங்கள் கால்களில் பொருத்திக் கொண்டால் போதும் போக வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

கடந்த ஆண்டு தயாரிக்கபட்ட இந்த ஸ்கூட்டருக்கு பல எதிர்ப்புக்கள் காணப்பட்டன.நடை பழக்கத்தை அழிக்கின்றது என்றும் வீதியில் செல்கையில் அபாயங்களை எதிர்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.ஆரம்பத்தில் தீப்பிடித்ததாக சொல்லப்பட்டது.தற்போதுஅனைத்து குறைகளும் நீக்கப்பட்டு புதிய வடிவில் வந்திருகிறது.

self-balancing scooters என்று தற்போது அழைகின்றனர்.

ப்ரேக் அடிக்கவும் ரிவர்ஸ் எடுக்கவும் இதில் முடியும்.

உங்கள் கால்களின் திருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் இதனுடைய அசைவுகளை மாற்றலாம்.

உங்கள் பாதங்களில் கொடுக்கப்படும் அழுத்தம் மூலம் அதனுடைய வேகத்தை மாற்றலாம்.

நடைபயிற்சியை தடுகிறது என்ற வாதத்தை மறுப்பதோடு

இது உங்கள் உடலுக்கு நல்ல பயிற்சி.முக்கியமாக உங்கள் கால்களுக்கு ஏற்ற பயிற்சி .உடல் சமநிலை, கால்களில் உள்ள தேவையற்ற சதை குறைப்பு உட்பட பல விடயங்களை இதில் நீங்கள் உணரலாம் என்று கூறியுள்ளனர்.

ஆரம்ப விலை$5,000 டாலர்களிலிருந்து விற்கப்படும் இந்த வீல் உங்களுக்கு சிறப்பான பயணத்தை தரும் என்று உறுதியளிகின்றனர்