சூதாட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

காலி இடம்பெற்றதாக கூறப்படும் சூதாட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சூதாட்டம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இலங்கையில் கடந்த வருடம் நடந்த டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக அல்ஜசீரா (Al Jazeera) தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த வருடம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

இதன்போது, டெஸ்ட் , ஒரு நாள் போட்டி மற்றும் இருபதுக்கு 20 தொடர் ஆகியவற்றை இந்திய அணி மொத்தமாக வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் காலியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், இந்தப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]