காலி வீதி மூடப்படல் தொடர்பான அறிவிப்பு

சுதந்திர தின முன்னேற்பாடுகள் மற்றும் சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான பயிற்சிகளுக்காக காலி வீதியில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தின முன்னேற்பாடுகள் மற்றும் சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான பயிற்சிகளுக்காக இன்று (27) முதல் 30 ஆம் திகதி வரையும் காலி வீதியில் செரமிக் சந்தியில் இருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

அத்துடன், பெப்ரவரி மாதம் முதலாம் திகதியும் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.