காலி மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்கள்!

இலங்கையின் தெற்கே காலி மாவட்டம், காலி நகருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் புதிய சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலை ஒன்றில் குறித்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் வீதி விதிமுறைகளை மீறி நடந்துள்ளதால் அவ்விடத்தில் சிறிது சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சாலையிலுள்ள பாதசாரிகளுக்கான வெள்ளை நிற பாதுகாப்புக் கடவையில் இருந்து தங்கள் கையடக்க தொலைபேசியை இருவரும் இயக்கியுள்ளதாகவும், இதன்போது அங்கு காத்திருந்த வாகனங்கள் சற்று நெரிசல் நிலையைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், காலியிலுள்ள சடனல மைதானம் அமைந்துள்ள பகுதியிலேயே பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இதுதான் இலங்கையின் சுற்றுலா சுதந்திரம் என பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]