காலி தொழிற்சாலையில் தீவிபத்து

 

காலி, போகஹகொட பகுதியில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் இன்று நண்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் உள்ள இறப்பர் குவியலில் தீ பற்றியுள்ள நிலையில் தொழிற்சாலைக் கட்டடம் அமைந்துள்ள பகுதிகளுக்கும் தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்குக் காலியில் உள்ள தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.