காலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது

காலி – ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவற்துறை மா அதிபரிடம் பூரண விசாரணை அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள காவற்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் குறித்த அறிக்கையை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக காவற்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச்.மனதுங்க குறிப்பிட்டுள்ளதோடு  தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளையும் அவதானித்து வருவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த வர்த்தகர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்படும் காவற்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசீன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த 23ஆம் திகதி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

காவற்துறை உடையில் வந்த சிலர் அவர்களை கடத்திச் சென்றதாக, அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள் இதனிடையே, இந்த சம்பவம் காரணமாக தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரவீ விஜேகுணவர்த்தனவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

அவர் தற்காலிகமாக கொழும்பு காவற்துறை தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகபேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]